கண்டமனூர் மயிலாடும்பாறை கிராமத்தில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் துண்டு பிரசுரங்கள் விநியோகம் தீவிரம்.
மயிலாடும்பாறை கிராமத்தில் திமுக கட்சி சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது , இதில் ஆண்டிபட்டி தொகுதி பார்வையாளர் கரூர் முரளி, மாவட்டத் துணைச் செயலாளர் மலைச்சாமி ஆகியோர் தலைமையிலும் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி, ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயராமன், முன்னிலையிலும் ஒன்றியகவுன்சிலர் மச்சகாளை , திமுக கிளை கழக நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், குறிஞ்சி மாடசாமி தென்னரசு, வேல்முருகன், அறிவழகன், கோட்டைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் உமாமகேஸ்வரி வேல்முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோவில் பாறை பெருமாள், தங்கம்மாள்புரம் பிரபு, தொழில்நுட்ப பிரிவு பிரபு, வினோத்குமார், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்,
இதே போல்
கண்டமனூர் கிராமத்தில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் 2024ம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சிறப்பம்சங்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கினர், இதில் தொகுதி பார்வையாளர் கரூர் முரளி தலைமையில்
கடமலை மயிலை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் முன்னிலையிலும் ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், மாவட்ட மீனவர் அணி கர்ணன், ஒன்றிய இளைஞரணி ஈஸ்வரன், மாணவரணி பிரபாகரன், கிளைக் கழக நிர்வாகிகள் செல்வகுமார், சுதாகர், ஈஸ்வரன், கருணாநிதி, ராமானுஜம், பிரஸ்பாண்டி, உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
படம் கண்டமனூர் கிராமத்தில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் துண்டு பிரசங்கம் விநியோகம் நடைபெற்றது.



