Type Here to Get Search Results !

வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதற்கட்டபயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுலவர் / மாவட்டஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதற்கட்டபயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுலவர் / மாவட்டஆட்சித்தலைவர்  தலைமையில் நடைபெற்றது.


தேனி மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுலவர் / மாவட்டஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.



தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் 33. தேனி பாராளுமன்ற  பொதுத்தேர்தல்-2024-இல் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆர்.வி.ஷஜீவனா,  தலைமையில் இன்று (20.05.2024) நடைபெற்றது.




           190.சோழவந்தான், 197.உசிலம்பட்டி,  198. ஆண்டிபட்டி, 199. பெரியகுளம் (தனி), 200. போடிநாயக்கனூர், மற்றும் 201. கம்பம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய தேனி பாராளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று சுமூகமாக நடைபெற்றது. இத்தேர்தலின் போது பதிவான வாக்குகள் அனைத்தும் கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 


இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வருகின்ற 04.06.2024 அன்று தேனி பாராளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமாக கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. வாக்கும் எண்ணும் அலுவலர்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 



வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் 04.06.2024 அன்று எந்த மேஜையில் பணியாற்றிட வேண்டும் என்பது குறித்து காலை 5 மணி அளவில் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பின், எந்த மேஜையில் எந்த வாக்கு பதிவான இயந்திரங்கள் எண்ணப்பட வேண்டும் என்பது குறித்தும் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். ஆகையால், வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் காலை 6 மணிக்குள்ளாக தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கூடத்திற்கு வருகை தந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 7 மணிக்கு முன்னதாக இருக்கையில் அமர வேண்டும். வாக்கும் எண்ணும் மையத்தில் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

        வாக்கு எண்ணிக்கையின் மேஜையில் ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் மற்றும்  ஒரு நுண்பார்வையாளரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தபால் வாக்கு சீட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு  துவங்கிய அரை மணி நேரம் கழித்து 8.30 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரத்தின் பதிவு வாக்கு எண்ணிக்கை துவங்கப்படும். 


       மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் நாள் அன்று காலை, வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, அங்கிருந்து வாக்கு எண்ணப்படும் மேஜைக்கு கொண்டு வரப்படும்.


      தங்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதுதானா என்பதனை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள பச்சை நிற அட்டையில் உள்ள எண்ணை 17C விண்ணப்பத்துடன் ஒப்பிட்டு சரிபார்த்திட வேண்டும். முகவர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் கட்டுப்பாட்டு கருவியினை வைத்துக் கொள்ள வேண்டும்.


         ஒரு சுற்றுக்கு தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையிலிருந்து எடுக்கப்பட்டு 14 மேஜைகளுக்கும் வரிசையாக வழங்கப்படும். அந்த சுற்று முடியும் வரை அடுத்த சுற்றுக்கான மின்னனு இயந்திரங்கள் எடுக்கப்படாது . வாக்கு எண்ணும் அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் முதல் இறுதி வரை தமக்கு ஒதுக்கப்பட்ட மேஜையை தவிர்த்து வேறு எங்கும் செல்லக் கூடாது. ஒவ்வொரு சுற்று வாக்குகளும் வேட்பாளரின் முகவர்களுக்கு வாக்குப்பதிவுகளை  நன்றாக தெரியும் வகையில் காண்பிக்க வேண்டும்.


         வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் ஐயம் எழும்பட்சத்தில் அதனை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உடனடியாக தெரிவித்திட வேண்டும்.வாக்கு எண்ணிக்கையின் போது இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி , வாக்கு எண்ணிக்கையினை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்திட வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இப்பணிகள் அனைத்தையும் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும்.


        இப்பயிற்சி வகுப்பில், மாவட்ட வருவாய் அலுவலர்  இரா.ஜெயபாரதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)  ஷீலா, தேர்தல் வட்டாட்சியர் செந்தில்குமார், பேரிடர் வட்டாட்சியர் பாலசண்முகம் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


சினிமா செய்திகளுக்கு


கே.ஆர் விஜயா படத்தில் ரஜினியை நடிக்க சிபாரிசு செய்த சிவாஜி



https://youtu.be/iCB2o0u9Ovs?si=EgmBJRCRMQcKOJB7


எம் ஜீ ஆருடன் கவுண்டமணி நடித்த படம்



https://youtu.be/WMbvoxfB10U?si=Cq7nKjVPDgIpC6Oj

விஜயகாந்த் - ராமராஜன் 13 முறை நேருக்கு நேராக மோதல்



https://youtu.be/lqRKPYMHuAw?si=3tvHOIsrx_yuRkci

தேனி மாவட்ட செய்தி தளத்தில் இணைய 

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store