24 மணி நேர மது விற்பனை கணவர்களை காப்பாற்ற கோரி மனைவியர் கலெக்டரிடம் மனு
தேனி அருகே வீரபாண்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 25 கும் மேற்பட்ட பெண்கள் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் ஷஜீவனா விடம் மனு அளித்தனர்.
இந்த மனு குறித்து பெண்கள் கூறுகையில், காட்டு நாயக்கன்பட்டி கிராமத்தில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நள்ளிரவு நேரத்தில் சென்றாலும் கூட தாராளமாக மது விற்பனை செய்யப்படுகிறது.
இதன் காரணமாக எங்கள் வீட்டு கணவர்மார்கள் மது போதைக்கு அடிமையாகி குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கள்ளக்குறிச்சி போன்ற நிலை ஏற்படும் அபாயம் உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினர்.
மேலும் 24 மணி நேரமும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதனால் எங்கள் கிராமத்தில் உள்ள ஏராளமான ஆண்கள் மது பழக்கத்துக்கு அடிமையாகி அனைவரும் குடும்பமும் சீரழிந்து வருகிறதால்கள்ளக்குறிச்சி சம்பவத்தை போல் தங்களுக்கு சுமந்து
கணவர்களின் மது பழக்கத்திற்கு காரணமான சட்ட விரோத மது விற்பனை தடுக்க மனைவியர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சினிமா செய்திகள்
டிஸ்கோ சாந்தியின் Top 10 தகவல்
https://youtu.be/xONEQZNjI9c?si=l0e-iYkyFrnxY1cl
ஒரே குடும்பத்தில் சினிமாவில் நுழைந்து வெற்றி தோல்விகளை சந்தித்த இரத்த உறவுகள்
https://youtu.be/bSz3Q7cv2ds?si=fLredw-Xe4l8wKBw
வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணையில் இவ்வளவு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளதா?
https://youtu.be/HxNnpEZmZuY?si=BNkymEyth6bZ8tbo
தேனி மாவட்ட தகவல்களுக்கு
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு



