தேனியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சங்கத்தினர்
தேனியில் உள்ள தேனி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வாளகத்தில் நிரந்தர ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திட்டச் செயலாளர் தேவராஜ் தலைமையிலும் , மாநில செயற்குழு வளர்மதி ,திட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரியும், வேலைப்பளு ஒப்பந்தத்திற்கு எதிராக Re deplonent discontinued உத்தரவுகளை திரும்ப பெறக்கோரியும் ,பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்களை வழங்கிட காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க கோரியும்,அரசு ஊழியர்கள் பெறுகின்ற குடும்ப நலநிதி ரூபாய் 5 லட்சத்தை மின்வாரியத்திலும் அமல்படுத்த கோரியும்
மின்விபத்தில் உயிரிழக்கும் மின்வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு நிதி ரூபாய் 10 லட்சம் அறிவித்ததை அரசாணை செய்ய வேண்டும் என்றும், வாரியா உத்தரவாகவும் வெளியிடக் கோரியும்,
1 -12- 2019க்கு பின் வாரிய பணியில் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் ஆறு சதவீதம் ஊதிய உயர்வை வழங்கிட கோரியும்,
கேங்மேன் தொழிலாளர்களுக்கு ஊர் மாற்றம், கள உதவியாளர் பணி மாற்றம் அளித்திடக் கோரியும் ,உள்முக தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட குரும தேதி (Crucial data) வை கைவிடக்கோரியும், K2 சிப்ட் முடியை அமுல்படுத்தி ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் காணக்கோரியும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன் சிறப்புரை ஆற்றிய இந்த காத்திருப்பு போராட்டத்தில் ,சிஐடியு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ,மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்





