தேனியில் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையிலும் மாநில மண்டல செயலாளர் மானுவேல் ,மாநில மகளிர் அணி அமைப்பாளர் ரங்கநாயகி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் மாவட்ட அமைப்பு செயலாளர் பவானந்தன் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 70 வயது நிரம்பிய அனைவருக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கூறியும் ,அங்கன்வாடி சத்துணவு பணியாளருக்கு குறைந்தபட்ச ஓய்வு ஊதியமான ரூ7850 வழங்க வேண்டும் என்று கூறியும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை காசு இல்லா மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியும் ,ஒன்றிய அரசு வழங்குவது போல் மருத்துவ படி ரூபாய் 1000 வழங்க வேண்டும் என்றும் ,கம்யூட்டேசன் திரும்பி வழங்கும் காலம் 12 ஆண்டுகளாக குறைக்கப்பட வேண்டும் என்றும் ,
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
ஓய்வூதியர் எந்த தேதியில் இருந்தாலும் அந்த மாதம் முழுமையான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறியும் ,மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி வழங்க வேண்டும் என்று கூறியும், ஓய்வு பதிவர்களை பாதிக்கும் ஒன்றிய அரசின் வேலி டேசன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ,ஒன்றிய அரசு விரைந்து எட்டாவது ஊதிய குழுவினை அமைக்க வேண்டும் என்று கூறியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்




