தேனி மாவட்ட தொகுதிகளை விட மதுரை மாவட்டத்தில் செல்வாக்கு அதிகம் தேனியில் தங்க தமிழ்செல்வன் பேட்டி
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தேனி பாராளுமன்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்தார் .முன்னதாக தேனி நேரு சிலை பகுதியில் இருந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அமைச்சர்கள் ஐ பெரியசாமி, மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் ஊர்வலமாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலம் வருகை புரிந்தனர்
பின்பு தங்க தமு தமிழ் செல்வன் தேர்தல் நடத்தும் அலுவலர் சஜீவனாவின் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் அமைச்சர்கள் பெரியசாமி, மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் , காங்கிரஸ் கட்சியின் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்
தங்க தமிழ்செல்வன் செய்தியாளர் சந்திப்பு
தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர் சந்திப்பின்போது பதிந்து வருடங்களுக்கு பின்பு மீண்டும் டிடிவி தினகரன் வந்திருப்பதாக டிடிவி தினகரன் கூறியதாக தெரிவித்தனர் . தினசரி மக்கள் பிரச்சினைகள் அதிகமாக உள்ளது என்றும் அதனை அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தினசரி மக்களிடம் நேரில் சென்று பார்த்து சரி செய்து வருகின்றனர் என்றும் ,ஆனால் 15 வருடங்களுக்கு பின்பு வந்தால் அவர்களுக்கு மக்கள் பிரச்சனை தெரியாது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து
30 வருடங்களுக்கு மேல் பிஜேபி தமிழகத்தில் தேர்தலில் வெற்றி அடையாது என்று கூறிய நபர் தற்பொழுது பிஜேபி யுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்றும். மேலும் டிடிவி தேனி தொகுதியிலும் ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள் . இதிலிருந்து டிராமா செய்கிறார்கள் என்று தெரிகிறது.காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல் விலை 70 ரூபாய் இருந்தது. தற்போது 100 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டது அதேபோல் சிலிண்டர் விலையும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சென்று விட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் சிலிண்டர் விலைகள் மற்றும் அடிப்படை பொருட்கள் விலை குறையும் என்றும் ,ஆண்டிபட்டி பெரியகுளம் போடி கம்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை விட சோழவந்தான் உசிலம்பட்டி பகுதிகளில் அதிக செல்வாக்கு உள்ளது என்றும் ,இதனால் அப்பகுதியில் அதிகமான வாக்கு திமுகவுக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
.
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய



