ஆண்டிபட்டி அருகே மலைவாழ் மக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு முகாம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜக்காள்பட்டி ஊராட்சி கதிர்வேல்புரம் மலைவாழ் மக்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
வருகின்ற 19ஆம் தேதி பாராளுமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ,தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள ராஜக்காள்பட்டி உட்கடை கதிர்வேல் புரத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் சசீவனா அவர்கள் அறிவுறுத்தலின்படி, விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதா ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாணி, ஊராட்சி செயலர் பால்பாண்டி, திலகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். மலைவாழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், 100% வாக்கு செலுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது.
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய



