அமமுக கட்சி ஒன்றிய செயலாளர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட மயிலாடும்பாறை கிராமத்தில் அ.ம.மு.க கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் அலுவலகம் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. அ.ம.மு.க தேனி வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் கடமலை-மயிலை தெற்கு ஒன்றிய செயலாளர் இ.கே.பி. ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் வைரபாண்டி, தேனி நகர செயலாளர் குருகணேஷ், ஒன்றிய துணைச்செயலாளர் அழகேசன், மாவட்ட நிர்வாகி டி.கே.எஸ். பரமேஸ்வரன்,
ஒன்றிய அவைத்தலைவர் இளங்கோவன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுதாகர், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் லோகநாதன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மலைச்சாமி, ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் விஜயா, இளைஞர் பாசறை செயலாளர் நடேசன், ஓட்டுனர் அணி செயலாளர் முருகன், விவசாய பிரிவு செயலாளர் அலெக்ஸ் பாண்டியன், மாவட்ட தொழில் பிரிவு துணைச் செயலாளர் சிவ மாயன், ஊராட்சி செயலாளர்கள் கண்ணன், தங்கப்பாண்டி, பரமன், பழனிச்சாமி. சின்னச்சாமி , அபிமன்யு, கிளைச் செயலாளர்கள் ராஜாங்கம், பாலு, வேல்முருகன், பிரபு, சுப்புராஜ் , சென்ராயன், சுருளிபாண்டி, பெருமாள், ஜக்கணன், பாண்டி, கோவலன், இளங்கோவன், சரவணன், குபேந்திரன், வீராச்சாமி, மலைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


