தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் தரமற்ற உணவு விற்பனை செய்வதை தடுக்க கோரி கோரிக்கை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற நோய்கள் பிரிவு மற்றும் உள் நோயாளிகள் பிரிவில் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கேரளா மாநிலம் , மதுரை , திண்டுக்கல் , தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று பயன் பெற்று வருகின்றனர்.மேலும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்களின் வசதிக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவமனை வளாகத்தில் கேண்டின் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாக பல்வேறு ஹோட்டல்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு சுகாதார மற்ற நிலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் , சிகிச்சை பெற்று குணமடைந்தாலும் கூட சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்துவதனால் பல்வேறு நோய்கள் தாக்க வாய்ப்பு உள்ளது என்றும் ,இதனால் சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும் இதே போல் மருத்துவமனை வளாகம் முன்பாக சுகாதாரமற்ற நிலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு உப தைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும்,
இதனை கருத்தில் கொண்டு மருத்துவமனை வாளகத்திலும், வளாகத்தின் முன்பும் சுகாதாரமான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரமான உணவு பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று கூறி சிவசேனா கட்சி சார்பில் சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் தேனி மாவட்ட தலைவர் முருகவேல் முன்னிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்த நிகழ்வின் போது தேனி மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேஷ்
தேனி மாவட்ட இளைஞரணி பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்




