நத்தம் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்கு இணையவழியில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும் தே னி மாவட்ட ஆட்சியர் தகவல்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணை எண்:221 SS-II(1) பிரிவு, தேதி: 04.05.2023 ன் படியும், 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையின் போது, மாண்புமிகு நிதி மற்றும் மனித வளத்துறை மேலாண்மை அமைச்சர் அவர்களால் 20.03.2023 அன்று சட்டமன்றத்தில் "இந்த நிதியாண்டில், கிராம நத்தம் தொடர்பான நிலப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு, நத்தம் நிலங்களுக்கான பட்டா மாறுதல் பணி இணையவழியில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தேனி மாவட்டத்தில் நத்தம் தொடர்பான ஆவணங்கள் போடிநாயக்கனூர், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி ஆகிய 4 வட்டங்களில் முழுவதுமாக இணையவழிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், உத்தமபாளையம் வட்டத்தில் இணையவழியில் நத்தம் ஆவணங்கள் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேற்குறிப்பிட்ட 4 வட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நத்தம் நில ஆவணங்கள் தொடர்பான முழுப்புலம், உட்பிரிவு பட்டா மாறுதல் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்கு அருகில் உள்ள பொது சேவை மையத்தில், இணையவழியிலேயே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.
புல எண் மற்றும் உட்பிரிவு எண் ஆவணங்கள் பெறுவதற்கு ஆதார்எண், முகவரி, தொலைபேசி எண் மற்றும் தேவைப்படும் ஆதார ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பித்தும், அதற்கு உரிய கட்டணத்தினையும் இணையவழியிலேயே செலுத்தி தங்களுக்கு தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த சிறப்பு வசதியினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, நத்தம் பட்டா தொடர்பான ஆவணங்களை இணைய வழியில் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற




