தேனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் இன்று (15.03.2024) நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் இதுவரை 13,364 எக்டர் பரப்பிலும், சிறுதானியங்கள் 12,609 எக்டரிலும், பயிறு வகைகள் 8,618 எக்டரிலும், பருத்தி 2,867 எக்டரிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 2,405 எக்டரிலும் மற்றும் கரும்பு 2,357 எக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல் விதை இதுவரை 137 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 63.8 மெ.டன்னும் (NLR, CO 55), சிறுதானியங்கள் 2.00 மெ.டன்னும் (கம்பு கோ 10, குதிரைவாலி MDU 1) பயறு வகை விதைகள் 4.54 மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் 2.3 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1,637 மெ.டன்னும் (MFL, Spic & IFFCO), DAP 786 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 555 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 4,710 மெ.டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல்லிற்கு பின் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.400 மானிய விலையில் பயறு வகை விதைகள் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. பாரத பிரதமரின் கௌரவ ஊக்கத்தொகை திட்டத்தில் இன்னும் 3,485 விவசாயிகள் e-KYC நடைமுறையினை நிறைவு செய்யாமல் உள்ளதால் அவர்கள் அருகில் உள்ள வங்கிகிளை அல்லது பொது சேவை மையத்தினை அணுகி பயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டது. சாகுபடிக்கு ஏற்ற தரிசு நிலங்களில் எண்ணெய்வித்து மரப்பயிர்களான புங்கம் எக்டருக்கு 500 எண்கள் சாகுபடி செய்ய ரூ.20,000/-மும், இலுப்பை எக்டருக்கு 500 எண்கள் சாகுபடி செய்ய ரூ.15,000 மும் மானியமாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
வேளாண்மை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உழவன் செயலி மூலம் பதிவேற்றம் செய்து மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்படும் மானியங்களை பெற்று பயனடையுமாறும், மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகுமாறும் விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு தேவைப்படும் இடங்களில் விதைப்பண்ணை அமைத்துத் தரப்படும் என்று வேளாண்மை இணை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
வேளாண்மை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உழவன் செயலி மூலம் பதிவேற்றம் செய்து மானியம் வழங்கப்படுவதால், விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்படும் மானியங்களை பெற்று பயனடையுமாறும் மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்துத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, வேளாண்மை இணை இயக்குநர் பன்னீர் செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ) வளர்மதி, தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், மற்றும் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற




