Type Here to Get Search Results !

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தற்காலிக கடைகளுக்கு சான்றிதழ் கட்டாயம் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தற்காலிக கடைகளுக்கு சான்றிதழ் கட்டாயம் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்



தேனியில் கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டம்

வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் எதிர்வரும் 07.05.2024 முதல் 14.05.2023 வரை (தேரோட்டம் 10.05.2024) சித்திரை பெருந்திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆர்.வி.ஷஜீவனா,  தலைமையில் இன்று (29.04.2024) நடைபெற்றது.




இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, 

வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருவிழாவின் போது தற்காலிக கடைகளை முறைப்படுத்தி, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே கடைகளை அமைத்திட வேண்டும். மேலும், கடைகள் அனைத்தும் தீ பற்றாத வகையில் அமைத்திட வேண்டும்.

விவசாயம் சார்ந்த தகவல்கள்



         https://youtu.be/Y90cjVpyK0Q?si=mI-E9p7YDKOtYFYv








சினிமா செய்திகள்


https://youtu.be/iCB2o0u9Ovs?si=IkQHwpouPOOsxHQB



      

https://youtube.com/watch?v=iCB2o0u9Ovs&si=IqH_rIAtFb04obGa


ஜமின்தார எம்.எஸ். பாஸ்கர்


26 முறை நேருக்கு நேராக மோதிய பாக்கிய ராஜ் , கமல்



பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மனை தரிசிக்க ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் ஏற்படுத்தி சிறப்பு பேருந்துகளை இயக்கிட வேண்டும். 



கோயிலில் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமானதாகவும், பாதுகாப்பாகவும் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். தற்காலிக உணவு தயாரிப்பவர்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் தற்காலிகச்சான்றிதழ் வழங்கிடவும், உணவு பண்டங்கள் விற்பனை செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற கடைகளில் அடுப்புகள் பயன்படுத்தக் கூடாது. சுழற்சி முறையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்.

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt


நம்ம தேனி மாவட்ட செய்திகள் தகவல் தளத்தில் இணைந்திட


Follow this link to join my WhatsApp group:


 https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

அனைத்து தற்காலிக கடைகளிலும் வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் அனைத்தும் மின் ஆய்வாளரால் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இராட்டினங்கள் மற்றும் பணியாளர்கள், தற்காலிக கடைகள் அனைத்திற்கும் காப்பீடு செய்திட வேண்டும்.



கோவில் நிர்வாகத்தின் மூலம் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர இடையூறு ஏற்படாத வண்ணம் உள்ளே செல்லவும், வெளியே வரவும் தனித்தனி வழித்தடங்கள் ஏற்படுத்திட வேண்டும். தேவையான இடங்களில் பக்தர்களின் பார்வைக்கு நன்கு தெரியும் வண்ணம் அறிவிப்பு பலகைகளை வைத்திடவும், ஒலி பெருக்கியின் மூலம் பக்த்தர்களுக்கு தேவையான அறிவிப்புகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேரோடும் சாலைகளை மேடுபள்ளமின்றி தேரின் எடையைத்தாங்கும் வண்ணம் சீரமைத்திட வேண்டும். 


  திருத்தேரின் அனைத்து அம்சங்கள் குறித்தும் உரிய நிலை ஆணைகளுடன் ஆய்வு செய்து, தேர் ஓடக்கூடிய நிலையில் உள்ளதா என்பதை பொதுப்பணித்துறையின் மூலம் உறுதி செய்ய வேண்டும்.  தேர் செல்லும் பாதையில் உள்ள மின்கம்பங்கள், மின்மாற்றி போன்றவற்றை தற்காலிகமாக மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருவிழா காலத்தில் மின்சாரம் தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 



  பக்தர்கள் ஆற்றில் குளிக்கும் இடம் முதல் அவர்கள் அம்மனை தரிசித்துவிட்டு செல்லும் வரை பாதுகாப்பு பணியில் தேவையான ஆண், பெண் காவலர்களை, பணியில் ஈடுபடுத்திட வேண்டும். காவல் கட்டுப்பாட்டு அறை அமைத்து நிலையான மற்றும் கூடுதலாக தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


தீயணைப்புத்துறையினர் விழா காலங்களின் போது போதுமான அளவு தீயணைப்பு வாகனங்கள், தீத்தடுப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.



  சுகாதாரத்துறையினர் கோயில் வளாகத்தில் இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை 24 மணிநேரமும் தயார் நிலையில் நிறுத்தி வைத்து தேவையான மருத்துவ சேவை வழங்கிட வேண்டும். 


திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் குடிநீர் தேவைக்காக திருக்கோயில் வளாகம், தற்காலிக பேருந்து நிலையம், கிராம நிர்வாக அலுவலம், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் அருகில்  குடிநீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். 


அனைத்து முக்கிய சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிகமான அளவு மின் விளக்குகளை அமைத்திடவும், தற்காலிக கழிவறைகள் தேவையான அளவு ஆங்காங்கே அமைத்திடும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய தீச்சட்டிகளை உடனுக்குடன் அகற்ற தேவையான ஜே.சி.பி. வாகனம், டிராக்டர் மற்றும் போதுமான பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.



திருவிழா பணியில் ஈடுபடும் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும்  பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 10 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


எனவே, அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.


இக்ககூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் திரு.முத்துமாதவன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருமதி பாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி சிந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store