Type Here to Get Search Results !

எங்க ஊர் நாட்டாமையை வெளியே விடுங்க ! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட மக்கள்

எங்க ஊர் நாட்டாமையை வெளியே விடுங்க ! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட மக்கள்


  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், மேக்கிழார்பட்டி கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய இடமாக உள்ளது என்றும்,அனைவரும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர் என்றும் ,மேக்கிழார்பட்டி கிராம பகுதிகளுக்கு பாத்தியப்பட்ட நீர்ப்பாசான குளத்தை ஆக்கிரமித்து போலி பத்திரம் போட்டு நில ஆக்கிரமிப்பில் தொடர்புள்ள சிலர் கூட்டுச் சேர்ந்து மேக்கிழார்பட்டி ஊர் நாட்டான்மை ராமகிருஷ்ணன் என்பவர் மீது  பொய் வழக்கை பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றும் ,


இதனால் காவல்துறை அதிகாரிகள் நினைத்தால் ஏதாவது ஒரு ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கைப் போட்டு கைது செய்யப்படலாம் என்று பொதுமக்கள் அனைவரும்  பெரும் அச்சத்தில் உள்ளதாகவும் ,   காவல் துறை சார்பில்  ஊர் நாட்டாமை  மீது போடப்பட்ட சம்பவத்திற்கு ஊர் நாட்டாமைக்கும்  எந்த சம்பந்தமும்  இல்லை என்றும் ,இச்சம்பவத்தினால்  தேவேந்திர குல மக்களின் பிரதிநிதியாகவும் ,ஊர் நாட்டாமையாகவும் செயல்பட்டு வருபவர் மீது போடப்பட்ட பொய் வழக்கினால் அக்கிராமத்தில் வாழுகின்ற ஒட்டுமொத்த மக்களின் மீது அதிரிப்தி ஏற்பட்டு வருவதாகவும்,

சினிமா செய்திகள்

டிஸ்கோ சாந்தியின் Top 10 தகவல் 

https://youtu.be/xONEQZNjI9c?si=l0e-iYkyFrnxY1cl



ஒரே குடும்பத்தில் சினிமாவில் நுழைந்து வெற்றி தோல்விகளை சந்தித்த இரத்த உறவுகள்

https://youtu.be/bSz3Q7cv2ds?si=fLredw-Xe4l8wKBw



https://youtu.be/bSz3Q7cv2ds?si=fLredw-Xe4l8wKBw

வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணையில் இவ்வளவு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளதா?

https://youtu.be/HxNnpEZmZuY?si=BNkymEyth6bZ8tbo

நடிகர்களின் நிஜமான பெயர்கள்


தேனி மாவட்ட தகவல்களுக்கு

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

வேலைவாய்ப்பு தகவல்களுக்கு

https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4


 

" வேலியே பயிரை மேய்ந்த தலை போல " இந்த சம்பவம் நடைபெற்று வருவதாகவும் , இச்சம்பவம் குறித்து இதுவரையிலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் .அவர்களுக்கு  உண்மைச் சம்பவம் பற்றி உளவுத்துறை மூலம் தகவல் தெரிவிக்க படவில்லை ஏன்? என்ற  கேள்வியாக உள்ளது என்றும்,  ஊர் நாட்டாமை ராமகிருஷ்ணன் மீது தனிப்பட்ட வெறுப்பினாலும், சிலரின் தூண்டுதலின் காரணமாகவும் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் போடப்பட்ட பொய் வழக்கை உடனடியாக வாபஸ் பெற்று, நிபந்தனையற்ற முறையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தினை  தொடர்ந்து தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு பெரியகுளம் Rdo சம்பவ இடத்திற்கு வருகை புரிந்து ஆர்ப்பாட்டம் நடத்திய நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் . தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


 இந்த ஆர்ப்பாட்டாம் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் M.சிவக்குமார் தலைமையிலும் ,மாநில துணை பொது செயலாளர் பொ . பாலசுந்தரராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் P.நாகேந்திரன்,மாவட்ட துணைச் செயலாளர்கள் A.கலைச்செல்வன், வருசநாடு S.வேல்மணி,                A.அய்யனார் , P.ராஜா ஊர் காலாடி,      Ex ஒன்றிய பொறுப்பாளர் முருகன், மேக்கிழார்பட்டி தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர், கிளை நிர்வாகிகள், மகளிர் அணி பொறுப்பாளர்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர் .

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store