தேசிய கொடியுடன் தனக்கு சொந்தமான தனது பெயரில் உள்ள நிலத்தினை மீட்டு தருமாறு மனு அளித்த மாற்றுத்திறனாளி
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு சொந்தமான தனது பெயரில் உள்ள நிலத்தினை மீட்டு தருமாறு மனு அளித்த மாற்றுத்திறனாளி
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு சொந்தமான தனது பெயரில் உள்ள நிலத்தினை மீட்டு தருமாறு மாற்றுத்திறனாளி அப்தாகிர் என்பவர் மனு அளித்தார் மேலும் அந்த மனுவில்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே களிமேட்டு பகுதியில் வசித்து வருவதாகவும் , அதே பகுதியில் சர்வே எண் 639/9 என்ற சர்வே எண்ணில் துரைராஜ் ,மனைவி பரமேஸ்வரி ஆகியோரின் வாரிசுகளுக்கு பாத்தியப்பட்ட சரிபாதி சொத்தினை முறைப்படி கிரையம் வாங்கி உள்ளேன் என்றும் எனக்கு சொந்தமான நிலத்தில் 40க்கு மேற்பட்ட பல்லவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எந்தவொடு ஆவணமும் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருகின்றார் என்றும் இது சம்பந்தமாக உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் O.S.No.213/2016 நடைபெற்று அந்த வழக்கில் எனக்கு சாதகமாக தீர்ப்பாகி உள்ளது என்றும் எனக்கு சாதகமான தீர்ப்பின் அடிப்படையில் மேற்படி நபர்களிடம் பலமுறை வெளியேறச் சொல்லியும் அந்த இடத்தினை விட்டு வெளியேறவில்லை என்றும் ,சின்னமனூர் மின்சார வாரியத்தில் மின்இணைப்பு போர்வெல் இணைப்பு கொடுத்துள்ளார்கள். பலமுறை மின்சார வாரியத்தில் AD.A.E அவர்களிடம் மின்இணைப்பினை துண்டிக்க மனுக் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாகவும் மேலும் பல்லவராயன்பட்டியைச் சேர்ந்த நபர்கள் எனக்கு கொலை பிரட்டல் விடுத்து வருவதாகவும் ஆகவே என்னுடைய இடத்தினை மீட்டு தந்து கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளார் .
மேலும் அந்த மனு வழங்க வரும் பொழுது தேசிய கொடியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது



