தேனி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மழழை செல்வங்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது
தேனியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை கல்வி குழுமங்களின் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மூன்றாம் ஆண்டு மழழை செல்வங்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வேல்முருகன் மருத்துவமனை மருத்துவர் பிரபு பங்கேற்று கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், மாணவர்கள் எப்படி வேலை வாய்ப்பு பெறுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை பற்றியும் ,மகளிர் தினம் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார் .
மேலும் இந்த நிகழ்வில் 170 மழழை செல்வங்களுக்கு பட்டமளித்து சிறப்பிக்கப்பட்டது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை கல்வி குழுமங்களின் தலைவர் ராஜ்மோகன் செயலாளர் ஆனந்த் வேல் துணைத்தலைவர் கணேசன், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் தலைமையிலும்
பள்ளியின் செயலாளர் நவமணி, இணை செயலாளர் அய்யன் மூர்த்தி, பள்ளியின் முதல்வர் பூர்ணசெல்வி ,துணை முதல்வர் சங்கீதா ஆகியோர் முன்னிலையிலும் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்
இது போன்ற கல்வி , விளையாட்டு , ஆன்மீகம் , அரசியல் மற்றும் உங்கள் ஊர் செய்திகள் இடம்பெற
தேனி வாட்சாப் குழுவில் இணையவும்
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்துள்ளன
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
.
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்





