தேனி அருகே பூதிப்புரத்தில் உள்ள தேவி காலா கேந்திரா பள்ளியில் 19 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களின் வரலாற்று நாடகங்கள் அரங்கேரியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தேனி பூதிப்புரத்தில் தேவி காலா கேந்திரா நர்சரி பிரைமரி பள்ளியின் 19-வது ஆண்டு விழா நடைபெற்றது விழாவில் முதல் வரவேற்பு நிகழ்ச்சியாக பள்ளி மாணவிகள் பட்டு உடை அணிந்து நேர்த்தியாக பரதநாட்டியம் ஆடியது பண்டை தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது
இதே போல மாணவ மாணவிகள் அலங்கார வண்ண வண்ண உடை அணிந்து திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு உற்சாகத்துடன் நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்
இதையடுத்து தமிழர்களின் மற்றொரு பாரம்பரிய கலைகளில் நாட்டுப்புற கிராமிய கலைகளுடன் திரைப்பட பாடலுடன் சேர்ந்து ஆடி மாணவிகள் ஆடியதும் அனைவரையும் கவர்ந்த நிலையில் சுதந்திர போராட்ட வீரர்களின் நாடகத்தையும் சிறப்பாக நடித்து காட்டி மாணவர்கள் தங்களின் கலை திறமையினை வெளிப்படுத்தினர்
மேலும் விழாவிற்கு முன்னதாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பாட்டு கட்டுரை ஓவிய போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன .இந்த விழாவில் தேனி மாவட்ட என்.பி. பள்ளி நலச் சங்கத்தின் இணைச் செயலாளர் நடராஜன்,முனைவர் மருத்துவர் கே.பி.ஸ்ரீவித்யா,சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் தலைவர் வீராச்சாமி ,
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
பெரியகுளம் அரசு மழலையர் பள்ளி,பிடி உதவியாளர் விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்று மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பு , முன்னேற்றம் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள். பள்ளியின் முதல்வர் லில்லி வரவேற்புரையும் , பள்ளியின் தாளாளர் நவீன் நன்றி உரை நிகழ்த்தினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்






