Type Here to Get Search Results !

தேனி மாவட்டத்தில் 60 ஆண்டு காலமாக குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்காததால் மாவட்ட ஆட்சியரிடம் 1000க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

தேனி மாவட்டத்தில் 60 ஆண்டு காலமாக குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்காததால் மாவட்ட ஆட்சியரிடம் 1000க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு 



தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இந்த போராட்டத்தில் தமிழக அரசு 2025-ல் கட்டிய வீடுகளுக்கு பட்டா வழங்க அறிவித்துள்ளது என்றும் ,இதுவரை தேனி மாவட்டத்தில் வழங்கவில்லை என்றும்,

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt   



 தர்மபுரி கிராமத்தில் பத்திரம் பதிந்து குடியிருக்கும் வீடுகளுக்கு கால தாமதம் கடத்தாமல் உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும் என்றும் ,



தேனி அல்லி நகரம் நகராட்சி 13வது வார்டு எம்.ஜி.ஆர் நகர் ,சமதர்மபுரம் ,அல்லிநகரம் ,பிசி பட்டி ,அன்னஞ்சி ,கோபாலபுரம் தாடிச்சேரி முத்துதேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 60 ஆண்டுகாலமாக குடியிருக்கும் வீடுகளுக்கு பட்ட வழங்கிட வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பி பெண்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்





இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் பொழுது பட்டா வேண்டி வந்திருந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவாயிலில் சென்றதால் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள் மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவல்துறையினர் பாதுகாப்புடன் 500க்கும் மேற்பட்டவர்கள் வரிசையாக நின்று தங்களுடைய மனுக்களை மனு அளிக்கும் பெட்டியில் வழங்கினார் .

மேலும்500க்கும் மேற்பட்டோர் பட்ட கேட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நுழைந்ததால் திருவிழா கூட்டம் போல் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store