ஆண்டிபட்டி இளங்குயில் இயக்கம் சார்பில் உயிரினும் மேலான தலைவர் கட்டுரை நூலை வெளியிட்டு முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் வாழ்த்துரை
தேனி மாவட்டம் சக்கம்பட்டியில் உள்ள தனியார் மஹாலில் இளங்குயில் அமைப்பின் சார்பில் 33வது ஆண்டு இதழ் வெளியீடு ,பல்லயம் கவிதை நூல் அறிமுகம் ,உயிரினும் மேலான தலைவர் கட்டுரை நூல் வெளியீடு, சுளுந்தீ நாவல் ஆசிரியருக்கு பாராட்டு, நற்செயல் புரிந்தோருக்கு பாராட்டு ,தியாக சீலர்களின் திரு உருவ படத் திறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
இந்நிகழ்ச்சியினை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முன்னாள் எம்எல்ஏ ஆசையன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம் முன்னிலை வகித்தார். கவிஞர் சென்கோவர்தன் வரவேற்று பேசினார். இளங்குயில் 33 ஆம் ஆண்டு சிறப்பிதழை முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் வெளியிட ,கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை தலைவர் பாஸ்கர் பெற்றுக் கொண்டார். நூல் குறித்து தமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன் வாழ்த்துரை வழங்கினார் . நிகழ்ச்சியில் தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் முத்துராமலிங்கம், கவிஞர்கள் கே எம் குருசாமி, ஜனகர், விவேகானந்தன், ஜோதி உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.



