Type Here to Get Search Results !

தேனியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் வீட்டை காலி செய்யக்கோரி நோட்டீஸ் -தடை செய்யக்கோரி கவுன்சிலர் தலைமையில் மனு

தேனியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் வீட்டை காலி செய்யக்கோரி நோட்டீஸ் -தடை செய்யக்கோரி கவுன்சிலர் தலைமையில் மனு 



தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சியின் 5வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கிருஷ்ணா பிரபா தலைமையில் மனு அளிக்கப்பட்டது


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்






தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய




 இந்த மனுவில் தேனியில் தேனி அல்லிநகரம் நகராட்சியில் உள்ள மந்தைக்குளம் கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக 8 - 10 - 2025 ஆம் தேதி அன்று சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது என்றும் ,மேலும் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட மந்தைக்களம் கண்மாய் கரையில் கட்டிய 98 வீடுகளுக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் வருகின்ற 22 10 2025 அன்று நடைபெறும் என்று அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது என்றும்,

அதேபோல் அல்லிநகரம் தோன்றிய காலத்தில் இருந்து தற்போது வரை 100 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் மக்கள் வசித்து வரும் நிலையில் அந்தப் பகுதியில் இதுவரை வசித்து வரும் மக்கள் அனைவரும் சொத்து வரி, குழாய் வரி ,மின் கட்டணம் மற்றும் அனைத்து அரசு சார்ந்த ஏனைய வரிகளும் நகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர் என்றும் ,அதேபோல் அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கான பத்திரப்பதிவு பதிந்து வைத்துள்ளனர் என்றும்,

நான்கு தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வரும் நிலையில் தற்போது நீர் வளர்ச்சி துறை அறிவிப்பு வந்த நிலையில் அங்கு குடியிருக்கும் மக்கள் அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் இதனால் அந்த பகுதிகள் குடியிருக்கும் அனைவருக்கும் அவர்களது வீட்டிலேயே இருக்க வசதி செய்து தர வேண்டும் என்று கூறி மனு அளித்தனர்





தேனி மாவட்டத்தின் திறவு கோல்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store