Type Here to Get Search Results !

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில் நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில் நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது 


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் சார்பில், சர்வதேச தொழில் நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கிற்கு கல்லூரி குழும தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பிரசன்னா வெங்கடேசன், ரேணுகா, சுதா மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் அருள்குமார் வரவேற்றார். அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், மதுரையில் பணியாற்றும் இயந்திரவியல் துறையில் பணியாற்றும் முனைவர் தர்மராஜா சிறப்புரையாற்றினார்.‌ தமிழகம் உட்பட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகளில் இருந்து இயந்திரவியல் கம்ப்யூட்டர், சிவில், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொடர்புத்துறை, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் மொத்தம் 980 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்




https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY




தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt





 இவற்றில் 290 ஆராய்ச்சி கட்டுரைகள் தேர்வாகி உள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கருத்தரங்கு ஏற்பாடுகளை எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக் துறை தலைவர் முனைவர் பவுன்ராஜ் செய்திருந்தார். முதுநிலை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறை தலைவர் முனைவர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store