தேனியில் மின்தடை ஏற்படும் இடங்கள் 27-12 - 2023
தமிழ்நாடு மின்சார துறை சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மின்சாரம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. மேலும் அந்தந்த பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மாதத்தில் ஒரு நாள் மின்தடை ஏற்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதுபோல் தேனி மாவட்டத்திலும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
மேலும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணி காரணமாக டிசம்பர் 27 2023 அன்று மின்தடை ஏற்படும் என்றும் இதனால் அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம் ,எம் சுப்புலாபுரம் சித்தார்பட்டி மரிக்குண்டு உட்பட பல்வேறு பகுதிகளின் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என மின் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது


