தேனி: நீர்வழித் தடங்களை மறித்த காற்றாலை கோபுரம்; சட்டமேதை அம்பேத்கரின் 69வது நினைவு நாளில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போர்க்கொடி
ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் நீர் வழித்தடங்களை மறித்து தனியார் காற்றாலை நிறுவனம் உயர்மின் கோபுரங்கள் அமைத்ததை அப்புறப்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும் சட்டமேதை அம்பேத்கரின் 69 ஆவது நினைவு நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திய தமிழக மக்கள் முன்னேற்ற கழக கிழக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை.
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 69ஆவது நினைவு நாள் இன்று இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் பொதுநல அமைப்புகள் சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் அம்பேத்கரின் நினைவு நாள் நிகழ்ச்சி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற தேனிகிழக்கு மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா கட்சியினருடன் சேர்ந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் சிலை மேடையின் கீழ்புறம் வைக்கபட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.இதையடுத்து அம்பேத்கரின் கொள்கைகலான சமூகநீதி சகோதரத்துவம் சமத்துவம் தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்டவைகளை வலியுறுத்தி வீரவணக்கம் செலுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தேனி மாவட்டத்தில் தனியார் நிலங்களையும் அரசு நிலங்களையும் தனியார் பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் தேனி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் அதை கைவிடக் கோரியும்,கண்டமனூர் பகுதியில் நீர்வழி தடங்களை மறைத்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தனியார் காற்றாலை நிறுவனம் உயர் மின் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த கோரியும் தமிழக அரசிற்கு கோரிக்கைளை விடுத்தார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் பிபி.மள்ளர் பாலா தலைமையிலும்தேனி மண்டல செயலாளர் S. செந்தில் குமார் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட மாணவரணி செயலாளர் ராமு ,மாவட்ட மகளிர் அணி செயலாளர் பிரியா,மாவட்ட விவசாய அணி தலைவர் செல்லப்பாண்டி,மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜபாண்டி,மாவட்ட தொண்டரணி தலைவர் தர்மராஜ்,மாவட்டஇளைஞர் அணி இணைச் செயலாளர் பால்பாண்டி
தேனி ஒன்றிய செயலாளர் பாலமுருகன் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி,ஆண்டிபட்டி ஒன்றிய தலைவர் வீரன்,ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞரணி செயலாளர்சின்னசாமி ,ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞர் அணி தலைவர் மாயன்,லட்சுமணன், சியான் சின்னு, தீபன்,பெருமாள், பாண்டி, முனீஸ்வரன்,பால்பாண்டி,மணிமாறன்,சிவகுமார், செந்தில்குமார்,கண்ணன், சுப்புராஜ்,ஆதி,சிவன்,திருமலை,,முனியாண்டி, மற்றும் பலர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்




