நாட்டாமை இல்லாமல் நரசிங்க பெருமாள் கோவில் திருவிழாவா? தேனி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்!
நாட்டாமை இல்லாமல் ஊர் திருவிழாவா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நாட்டாமை
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்டம் பூமலைக்குண்டு கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு .இவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.மேலும் இந்த மனு அளித்ததற்கு முன்பாக ஊர் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட மனுவில் வருகின்ற டிசம்பர் மாதம்30 ஆம் தேதி அன்று தங்கள் கிராமத்தில் நரசிங்க பெருமாள் திருக்கோவில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா நடைபெற உள்ளது என்றும், இந்த திருவிழாவில் நாட்டாமையாக இருக்கும் தங்கள் குடும்பத்தினரை புறக்கணித்துவிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் ,மேலும் தங்கள் கிராமத்தில் நடக்கும் நல்லது கெட்ட நிகழ்ச்சிகளில் நடந்தாலும் அதில் பங்கேற்க கூடாது என்றும் ஒரு சிலர் தூண்டுதல் பேரில் கிராமத்தில் நடந்து வருகிறது என்றும் தங்கள் தோட்டங்களில் உள்ளூர் மக்கள் வேலை செய்யக்கூடாது என்று முகமைக்காரர்கள் உத்தரவு பிறப்பித்த நிலையில் தங்கள் தோட்டத்தில் வேலை செய்வதற்கு உள்ளூர் கிராம மக்கள் யாரும் வருவதில்லை என்றும் ,இதனால் வேப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நபர்களை தோட்ட வேலைக்கு அழைத்து வருகிறேன் என்றும் ,இதனால் கூடுதல் செலவு ஆகிறது என்றும் ,
கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக பூமாலை கொண்டு கிராமத்தின் நாட்டாமையாக தங்கள் குடும்பத்தினர் இருந்து வரும் நிலையில் தங்கள் கிராமத்தில் உள்ள முகமைக்காரர்கள் செய்து வரும் செயல்களினால் பொதுமக்கள் யாரும் தங்களுடன் பேசாமல் இருந்து வரும் நிலை தற்பொழுது ஏற்பட்டு வருகிறது என்றும் இந்த தீர்வினை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று கூறி மனு அளித்தார் முன்னதாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்






