Type Here to Get Search Results !

ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

theni today News 0

ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா



தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேற்கு ஓடைத் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.



 விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு விபூதி, மஞ்சள் ,குங்குமம் ,பால், தயிர், தேன், இளநீர், பழங்கள், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகமும்,


ஆராதனைகளும் நடைபெற்றன.தொடர்ந்து தீப ஆராதனை நடைபெற்றது.
நவகிரக தோஷங்களை நீக்கி, தடைகளை உடைத்து, சோதனைகளை சாதனையாக்கி, கலியுகத்தில் தீய சக்திகளை அழித்து, தர்மத்தை காத்து அருள் பாலிக்கும் வீரஆஞ்சநேயர் பகவானை பக்தர்கள் பய பக்தியுடன் வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .


   விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு துளசி, செந்தூரம், லட்டு, கேசரி, வடை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது, அன்னதானம் வழங்கப்பட்டது .நிகழ்ச்சிகளை ஆஞ்சநேயர் திருக்கோவில் விழா கமிட்டியார் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.