Type Here to Get Search Results !

மத்திய அரசு சார்பில் நடந்த ஹேக்கத்தான் போட்டியில் முதலிடம் பிடித்த தேனி நாடார் சரஸ்வதி கல்லூரி மாணவர்கள்

 மத்திய அரசு சார்பில் நடந்த ஹேக்கத்தான் போட்டியில் முதலிடம் பிடித்த தேனி நாடார் சரஸ்வதி கல்லூரி மாணவர்கள்


மத்திய அரசு சார்பில் நடந்த ஹேக்கத்தான் போட்டியில் முதலிடம் பிடித்த தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்
தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி/மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் வருடந்தோறும் எஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் (ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்) போட்டி நடைபெற்றது. இந்திய அளவில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் மத்திய அரசு துறைகளுக்கு தேவையான திட்டங்கள் சமர்பிக்கப்படும் போட்டிகளாக கருதப்படும் நிலையில் இப்போட்டியில் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகள் 44,000 அணிகள் பங்கு பெற்றது.


இந்தியாவிலுள்ள எஸ்போம் டெக்னாலஜி, ஸ்மார்ட் எஜீகேசன், பேரிடர் மீட்பு துறை, எரிசக்தி துறை, சுற்றுசூழல் துறை உள்ளிட்ட 51 மத்திய அரசு துறைகளுக்கு தேவையான 176 சாப்ட்வேர் திட்டங்கள் மற்றும் 55 ஹார்டுவேர் திட்டங்கள் என 231 திட்டங்கள்- சமர்பிக்கப்பட்டன. பல தகுதி சுற்றுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்கு 1282 Project-கள் தகுதி பெற்றன. தமிழக அளவில் 443 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன.


2023ஆம் ஆண்டுக்கான ஆண்டிற்கான இறுதிச்சுற்றுப் போட்டிகள் 19.12.2023 மற்றும் 20,12.2023 ஆகிய தேதிகளில் இந்திய அளவில் 48 இடங்களில் நடைபெற்றது.இப்போட்டியில் நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சார்பில் அகமதாபாத குஜராத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், நாக்பூர் ராய் சோனி பொறியியல் கல்லூரி, அமராவதி பி.ஆர்.பாட்டில் கல்லூரி மற்றும் கல்லூரி ஆகிய இடங்களில் கலந்துகொண்டனர். கொண்டு தங்களுடைய செயல்பாடுகளை சமர்பித்தனர்


இப்போட்டியில் நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் ஆகிய துறைகளை சார்ந்த மாணவ/மாணவிகள் 5 அணிகளாக 30 மாணவ/ மாணவிகள் கலந்துகொண்டனர்.மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் இந்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாணவர்களின் திட்டங்கள் சமாபித்தனர்.


இப்போட்டி அசாம் மாநிலம் கௌஹாத்தி ராயல் குலோபல் பல்கலைக்கழகத்தில்
நடைபெற்றது. இவ்விழாவில் அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆலோசகரும் முனைவர் மம்தா ராணி போட்டியில் பங்குபெற்ற திட்டங்களை ஆய்வு செய்து இதில் மத்திய எரிசக்தி துறையின் மூலம் வழங்கப்பட்ட நீர் மின்சாரம் (ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர்) தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி/மாணவிகளின் ரேஷ்மா மசூதா, நவீன் பாரதி. ரூபினி. விக்னேஷ்வர் சோபியா அல்லின் ஆகியோரால் மென்பொருள் திட்டம் சமர்பிக்கப்பட்டது.


இப்படைப்பானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையில் மின்உற்பத்தி நிலையத்தின் தன்மை குறித்தும் மின் உற்பத்தி அமைய உள்ள இடத்தின் நீரோட்டம், மண் தன்மை, மழைப்பொழிவு, ஆகியவற்றைப் பற்றி நூறு ஆண்டுகளுக்கான தரவுகளை செயற்கைகோள் மூலம் சேகரித்து அதன் அடிப்படையில் மென்பொருள் உருவாக்கப்படும் வகையில் மென்பொருளுக்கு தேசிய அளவில் முதலிடத்தைப் பெற்று கல்லூரியின் பெருமை சேர்த்து ரூ. 1,00,000/- காசோலையைப் பெற்றனர். .


அதே போல் மாநிலம் மஹாராஷ்டிரா அமராவதி PR போட்டே பாட்டில் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூலம் சுற்றுப்புறச் சூழ்நிலைகள் பாதுகாக்கும் மென்பொருள் உருவாக்கும் திட்டம் வழங்கப்பட்டது. இப்போட்டியில் நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவிகளான மஞ்சுபாஷினி, யுவசக்தி, கீர்த்தனா, ரிப்ஃயாபானு, ஜெசீந்த்சரோன், ஸ்ரீஹரிபிரசாத். சுற்றுப்புறச்சூழ்நிலை பாதுகாத்தல் மற்றும் பாதிப்படையாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் தரவுகளை சேகரித்து அவர்களை அரசு சலுகைகள் மூலம் ஊக்கப்படுத்தி மீண்டும் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்துவதற்கான மென்பொருளை உருவாக்கிய மென்பொருளுக்கு தேசிய அளவில் முதலிடத்தைப் பெற்று தமிழகத்திற்கும் கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். மேலும் ரூ.1,00,000/- காசோலையினை பெற்றனர் போட்டியில் தென்னிந்திய அளவில் நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 2 அணிகள் இந்திய அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.

சினிமா செய்திகளுக்கு 

https://youtu.be/YTmfpngXnfQ?si=CA0reqZD3ejdx_zn


https://youtu.be/iCB2o0u9Ovs?si=LwGzhMDjqIuoM7kE


https://youtu.be/UIEvBVaTCkM?si=suMQHC6WkWqle63r



இப்பாராட்டு விழாவில் தேசிய அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் டி.ராஜமோகன், உபதலைவர் பி.பி.கணேஷ், பொதுச்செயலாளர் .எம்.எம்.ஆனந்தவேல், பொருளாளர் எம்.பழனியப்பன் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள். கல்லூரியின் செயலாளர்கள் .ஏ.ராஜ்குமார், .ஏ.எஸ்.ஆர்.மகேஸ்வரன், இணைச்செயலாளர் எஸ்.நவீன்ராம். கல்லூரியின் முதல்வர் டாக்டர் மதளைசுந்தரம். கல்லூரியின் துணைமுதல்வர்கள் .என்.மாதவன், டாக்டர் எம்.சத்யா. வேலைவாய்ப்பு துறை அலுவலர் டாக்டர் சி.கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
மேலும் தேசிய அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கு பெறுகிறார்கள், தமிழகத்தில் இருந்து பல்வேறு மாணவ மாணவிகள் பங்கு பெற்ற நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நாடார் சரஸ்வதி கல்விக் குழுமங்களின் மாணவிகள் இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் என ஏராளமானோர் பரிசு பெற்றனர். மாணவ மாணவிகளை பாராட்டி வருகின்றனர்

சினிமா செய்திகள்

சினிமா செய்திகளுக்கு 

https://youtu.be/6CpQlwFR3dQ?si=vVQchqqE4yZMRz0w



https://youtu.be/YTmfpngXnfQ?si=CA0reqZD3ejdx_zn




https://youtu.be/iCB2o0u9Ovs?si=LwGzhMDjqIuoM7kE




https://youtu.be/UIEvBVaTCkM?si=suMQHC6WkWqle63r





கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store