மாட்டு பொங்கலை முன்னிட்டு நாட்டு மாடுகளுக்கு கொழுக்கட்டை வழங்கி வணங்கிய மக்கள்
தேனி மாவட்டத்தில் தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் வைத்து பல்வேறு பகுதிகளில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தை பிறந்த நாளில் இரண்டாவது நாளான இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் கால்நடைகளுக்கு பொங்கல் வழங்கியும் பழவகைகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் சத்திரப்பட்டி, வயல்பட்டி , சிவலிங்கநாயக்கன்பட்டி , பந்துவார்பட்டி , எரசை , மஞ்சிநாயக்கன் பட்டி , சித்தார்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இன்று வரை நாட்டு மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர் .
இந்நிலையில் தைத்திருநாள் நாளின் இரண்டாவது நாளான இன்று மாட்டுப்பொங்கல் பொங்கலை முன்னிட்டு தாங்கள் வளர்க்கும் நாட்டு மாடுகளை போற்றும் வகையில் நாட்டு மாடுகளின் தொழுவங்களுக்கு மிகச்சிறப்பான முறையில் அலங்கரித்து, மஞ்சளினால் சுவாமி கோலங்கள் இட்டு, பொங்கலிட்டும் , ஆப்பிள் , திராட்சை வாழை பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பழவகைகள் வைத்தும் , வில்வ கூடைகளில் கொழுக்கட்டை வைத்தும் மாடுகளுக்கு மரியாதை செலுத்தினர்கள் .
அதே போல் கன்றுக்குட்டிகள் நன்றாக உணவு சாப்பிடவும் , வளர்ந்த மாடுகளைப் போல் காடு வெளிகளில் சுற்றி பசுந்திவனங்களை நன்றாக உணவாக உட்கொள்ளுவதற்கும் , தங்களின் சந்ததிகளை பெருக்கிடும் வகையில் கன்று குட்டிகளுக்கு மந்திரங்களையும் கூறினார்கள். நாட்டு மாடுகளுக்கு பொங்கல் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி தொழுவத்தினை திறந்து விட்டனர் பின்பு ஒவ்வொரு மாடாக மேய்ச்சலுக்கு சென்றது




