கம்பம் மெட்டு வழியாக வாகனங்கள் செல்ல தற்காலிக தடை
தேனி மாவட்டம் கம்பம் அருகே கேரளாவுக்கு செல்வதற்காக பாதை கம்பம் மெட்டு வழியாக அனைத்து கனரக வாகனங்களும் தினசரி கேரளா பகுதிக்கு சென்று வரும் கூலித் தொழிலாளர்களும் கம்பம் மெட்டு வழியாக தினசரி சென்று வருகின்றனர்.அதேபோல் சபரிமலைக்கு தமிழக பகுதியான மதுரை திண்டுக்கல் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கம்பம் மெட்டு வழியாக சொல்வது வழக்கம். இந்நிலையில் தற்பொழுது கம்பம் மெட்டி பகுதிகளில் தற்பொழுது நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு பணியும் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் கம்பம் மெட்டு வழியாக 10 நாட்களுக்கு தற்காலிகமாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது


