ஆண்டிபட்டியில் உள்ள ஜெய் கிரிஷ் வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் ஜெய் கிருஷ் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது .
முதல் நாள் நடந்த விளையாட்டு விழாவில் சாரணர் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யாக தேவன் தலைமை வகித்தார். அப்போது மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் நடந்த பள்ளி ஆண்டு விழாவில் திரைப்பட நடிகை அம்பிகா தலைமை வகித்து வாழ்த்து பேசினார். ஹரிதா ஓவர்சீஸ் கல்வி நிறுவனர் சுரேஷ்குமார், அக்குவா பியூர் பிளஸ் நிர்வாக இயக்குனர் சக்திவேல், பள்ளி நிறுவனர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் கயல்விழி வரவேற்று பேசினார் .
விழாவில் மாணவ மாணவிகளின் தனித்திறனை வெளிப்படுத்துவதற்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் ,பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர் .விழாவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.



