தேனி மாவட்டத்தின் இன்றைய செய்திகள் 13- 3 - 2024
தேனி மாவட்டம் கம்பம் அருகே சின்ன ஓவலாபுரத்தில் உள்ள தனியார் ஒயின் தொழிற்சாலையில் திராட்சை விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்தப் கூட்டத்தில் திராட்சை சாகுபடி பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் திராட்சை விவசாயிகளிடையே ஆலோசனை நிகழ்த்தப்பட்டது .இந்த பட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட திராட்சை விவசாயிகள் பங்கேற்றனர்
கம்பம் பகுதியில் இருந்து நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றி வந்த லாரி கே.கே பட்டிக்கு செல்லும் வழியில் அங்கு உள்ள திருக்கோவில் அருகில் சென்றபோது லாரியின் மேல் பகுதியில் இருந்த கதிர் அறுக்கும் இயந்திரம் இருந்ததனால் மின்சார வயர்கள் உரசியது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது பின்பு சரி செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் பவுன்ராஜ் இவர் கடந்த பத்தாம் தேதி அன்றுடாஸ்மார்க் கடையை மூடிவிட்டு அன்று வசுலான பணம் மற்றும் மிசின் ஆகியவற்றை கோடங்கிபட்டி தேவர் சிலை அருகே சென்ற போது இரண்டு மர்ம நபர்கள் பணம் மற்றும் அனைத்தையும் பிடுங்கி சென்றுவிட்டதாக தெரிகிறது .இது குறித்து போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் கடமலை மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மராஜபுரம் அரசரடி ,வெள்ளிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கள் பகுதிகளில் மின்சாரம் சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கூறியும் யாரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்று தகவல் பலகையை வைத்துள்ளதாக தெரிகிறது .மேலும் அந்தப் பகுதியில் கருப்பு கொடியும் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பாக உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் வழங்க வேண்டும் என்றும்,,நியாய விலை கடைகளில் சிறு தானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும்,,மது போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று கூறி சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
தேனி மாவட்டம் உத்தமம்பாளையத்தில் தமிழக அரசு தற்போது மகளிர்க்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை பற்றி நடிகை குஷ்பு தவறான கருத்தை வெளியிட்டதாக கூறி குஷ்பூவை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் நிலையில்லா மிதிச்சக்கரம் இலவச வண்டிகளை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கன்னி சேர்வைப்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர்ஆனந்தன்.இவர் தனது தோட்டத்தில் செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிப்பதற்காக மருந்து கலக்கி உள்ளதாக தெரிகிறது அப்பொழுது மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.இதனால் ஆனந்தன் உயரிழந்ததாக தெரிகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அழகாபுரியில் 33 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு பூமி பூஜையினை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
தேனியில் அதிமுகவின் மாவட்ட செயலாளர் முறுக்குடை ராமர் முன்னிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் கம்பம் ஆண்டிபட்டி தேனி பகுதி சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்
தேனி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றுவதற்காகவும் அந்த சேவையினை பாராட்டி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோடயங்களை வழங்கி சிறப்பித்தார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள மேல சொக்கநாதபுரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த தடுப்பு சுவரை பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று அகற்றினார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஆசாரிப்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளி யில் கூடுதல் அறை கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது பேரூராட்சி தலைவர் சந்திரலேகா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்றனர் மேலும் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட காமராஜபுரம் என்னும் கிராமத்தில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் தேனி மாவட்ட ஆட்சியர் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பித்தார்
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே உள்ள பல்துறை வளாக முன்பாக ரேசன் கடை பணியாளர்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
எங்கள் whatsapp குழுவில் இணைந்திடுங்கள் நமது தேனி மாவட்டத்தின் தினசரி செய்திகளை தெரிந்திடுங்கள்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
வேலைவாய்ப்பு அரசு திட்டங்கள் விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் பல்வேறு வகையான சிறப்பு தகவல்கள் உங்களுக்கு உடனுக்குடன் தெரிந்திட கீழ் காணும் whatsapp குரூப்பில் இணைந்து விடுங்கள்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY



