ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ 2 லட்சம் பறிமுதல்
தேனி மாவட்டம், 198, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி 2024 பாராளுமன்ற தேர்தல் இன்று (24.04.2024) கண்காணிப்பு நிலைக்குழு-அலுவலர் இராதாகிருஷ்ணன் வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, கண்டமனூர் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்த இருளியாண்டி, (த/பெ. பால்ச்சாமி) என்பவரிடமிருந்து ( வண்டி எண்:TN 67 AM 6147 Tata Ace ) வண்டியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) கைப்பபற்றப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது
இதே போல் தே னி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி 2024 பாராளுமன்ற தேர்தல் இன்று (24.04.2024) கண்காணிப்பு நிலைக்குழு வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, கண்டமனூர் வடக்குத்தெரு. கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், த/பெ. பேயத்தேவர் என்பவரிடமிருந்து ( வண்டி எண்:TN 58 AV 7080 ) வண்டியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) கைப்பபற்றப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது


