ஆண்டிபட்டியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேனி மாவட்டம் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.டி .நாராயணசாமியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அவரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்பு, தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த வி.டி .நாராயணசாமி மாவட்டத்தின் நுழைவாயிலான ஆண்டிபட்டிக்கு வருகை புரிந்தார். அப்போது அவருக்கு ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் ,கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், பேரூர் கழகச் செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர், மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.டி.கே ஜக்கையன் மற்றும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர் நாராயணசாமி வைகை சாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சியினரின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து சிறிது தூரம் ஊர்வலமாக சென்று கட்சியினருடன் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார் இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் சுமதி வடிவேல், கணேசன் ,நிர்வாகிகள் வெள்ளை பாண்டி ,பொன் முருகன் ,ராமச்சந்திரன், கவிராஜன், மாரியப்பன் ,மதியரசன், பேரூராட்சி கவுன்சிலர் பாலமுருகன் ,வீரக்குமார், ரத்தினபாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👍👍👍இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய


.jpg)