Type Here to Get Search Results !

பார்வைக்குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட்போன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

theni today News 0

பார்வைக்குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட்போன் பெறுவதற்கு   விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர்  தகவல் 


தேனி மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 18 வயது முதல் 70 வயது வரையுள்ள பார்வையற்றோர்/பார்வைக்குறைபாடுடையோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர்/காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டு வருகிறது.



இத்திட்டத்தில் பயன்பெற பார்வையற்றோர்/பார்வைக்குறைபாடுடையோர்/ செவித்திறன் குறைபாடுடையோர்/காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல்,  UDID அட்டை நகல்,  ஆதார் நகல்,  குடும்ப அட்டை நகல்,  புகைப்படம் -2  மற்றும்  கல்லூரியில் பயிலும் சான்று / சுயதொழில் புரியும் சான்று / நிறுவனத்தில் பணிபுரியும் சான்று ஆகியவற்றுடன் 06.03.2024 - க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு                    (மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம்) நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.


 மேலும், இதுதொடர்பான விபரங்களுக்கு 04546-252085 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆர்.வி.ஷஜீவனா  தெரிவித்துள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.