உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வீரபாண்டி பேரூராட்சி சேர்மனுக்கு வாழ்த்துக்கள் கூறிய சமூக ஆர்வலர்கள்
மகளிர் தின வாழ்த்துக்கள்உலகம் முழுவதும் மார்ச் 8 இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது உலகில் உள்ள மகளிரை போற்றும் வகையில் இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஏழை எளிய மக்கள் முதல் அரசியல்வாதி உட்பட அனைவரும் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி சேர்மனாக இருப்பவர் கீதா சசி
இவர் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை பொதுமக்களின் வசதிக்கேற்ப உடனுக்குடன் செய்து வருகிறார். மேலும் வீரபாண்டி பேரூராட்சி சேர்மனாக பதவி ஏற்று மூன்றாவது வருடத்தை கொண்டாடும் வகையிலும் உலக மகளிர் தினத்தை போற்றும் வகையிலும் கோட்டூர் ஹீரோ ஸ்டார் நண்பர்கள் சார்பாக வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி அவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்துக்களை கூறினார்கள்
மேலும் வீரபாண்டி பேரூராட்சியில் மிகச் சிறப்பான முறையில் அரசு சார்ந்த பணிகளையும் தனிப்பட்ட முறையில் பல்வேறு தொண்டுகளை செய்து வரும் கீதா சசி அவர்களுக்கு வீரபாண்டி பேரூராட்சிக்கு அலுவலகத்திற்கு செல்லும் வழியில் ஹிரோ ஸ்டார் நண்பர்கள் சார்பாக மலர் தூவி வாழ்த்துக்களை கூறினார்கள்
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்




