வாக்காளர் தகவல் சீட்டு ( பூத் சிலிப்கள்) வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் வீடு வீடாகச் சென்று வாக்காளர் தகவல் சீட்டு ( பூத் சிலிப்கள்) வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் வீடு வீடாகச் சென்று வாக்காளர் தகவல் சீட்டு ( பூத் சிலிப்கள்) வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
33.தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி பூதிப்புரம் பேரூராட்சி, ஆதிப்பட்டி கிராமம் பகுதியில் பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விவரிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் தயார் செய்யப்பட்ட வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்கள்) மற்றும் வாக்காளர் கையேடுகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று வழங்கி வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, இன்று (01.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளரும் தங்களது ஜனநாயகக் கடமையினை எவ்வித அச்சமும், தயக்கமின்றியும் வாக்களிப்பதற்காக தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று பூத் சிலிப்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
33.தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி பூதிப்புரம் பேரூராட்சி, ஆதிப்பட்டி கிராமம் பகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்கள்) வழங்கும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஒவ்வொரு வாக்காளரிடம் கையெழுத்து பெற்ற பின்னரே அவர்களின் வாக்காளர் தகவல் சீட்டினை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் தவிர பிற நபர்களிடம் வழங்க கூடாது. மொத்தமாகவும் அல்லது பிற நபர்களை வைத்து பணிகளை மேற்கொள்ளக் கூடாது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பில் அளிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி எந்தவித புகார் எழாமல் முறையாக பணியாற்ற வேண்டும். அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் உள்ள வாக்காளர்கள் எவரும் விடுபட்டுவிடாமல் குறித்த நேரத்திற்குள் பூத் சிலிப் வழங்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
மேலும் வாக்குப்பதிவு நாள், வாக்களிப்பதற்கான வழிமுறை,வாக்குகளை எவ்வாறு பதிவு செய்வது , இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி சேவை செயலிகள் என்னென்ன, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் என்னென்ன என்பது குறித்து விளக்கங்கள் அடங்கிய வாக்காளர் விளக்க கையேடுகள் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, போடிநாயக்கனூர் வட்டாட்சியர் மணிமாறன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👍👍👍இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
.
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய





