தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேனி மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்ட தலைவர் வசந்தா தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி திட்டப்பணிகளை சமூக நலத்துறை மற்றும் வருவாய் துறையினரிடம் ஒப்படைத்து கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ளும் தாய் சேய் நலப் பணி மற்றும் தடுப்பூசி பணி உட்பட பல்வேறு பணிகளை திறம்பட செயல்படுவதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும்
கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளுக்கு முரணாக அரசு ஆணைக்கு எதிராக இதர பணிகளில் குறிப்பாக கணினி பணிக்கு உட்படுத்துவதை கைவிட்டு கணினி பணியை மேற்கொள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒரு டேட்டா ஆப்ரேட்டர் என்று ஆப்ரேட்டர் பணியிடங்களை நியமிக்க வேண்டும்
சினிமா செய்திகளுக்கு
சில்க் ஸ்மிதா - பிரகாஷ்ராஜ் - சி.எல் ஆனந்தன் ஆகியோர் என்ன உறவு
https://youtu.be/xONEQZNjI9c?si=wpFypndNBMpkXWIw
அரங்கேற்றம் பிரமிளா வின் Top 10 தகவல்
https://youtu.be/UTRzJB-s8ZQ?si=KlKW2Wos6e4zlwKW
என்றும், VHN / ANM பதிவு உயர்வுக்காக அரசு கூடுதல் தலைமைச் செயலாளரிடம் மற்றும் இயக்குனர் பொது சுகாதார துறையினரிடம் விவாதித்து ஏற்றுக் கொண்ட வாறு பதவி உயர்வை முறைப்படுத்தி ஆண் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது போல் பெண் சுகாதார செவிலியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்றும்
,உட்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட பொருளாளர் எலியட் செயலாளர் ராமலட்சுமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்
தேனி மாவட்ட தகவல்களுக்கு
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
வேலை வாய்ப்பு செய்திகளுக்கு
https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4




