தேனி புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் தடுப்பு சுவர் கட்டுவதினால் போக்குவரத்து பாதிப்பு -தடுக்க கோரி மனு
தேனியில் நகரப் பகுதியில் பழைய பேருந்து நிலையம் செயல்பட்ட வந்த நிலையில் போக்குவரத்து இடைஞ்சல்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு தேனி மதுரை சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது இந்த புதிய பேருந்து நிலையம் மதுரை தேனி சாலையில் பைபாஸ் சாலை அருகே அமைந்துள்ளது மேலும் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் மலைப்பகுதி அமைந்துள்ளது .
சினிமா செய்திகளுக்கு
கே.ஆர் விஜயா படத்தில் ரஜினியை நடிக்க சிபாரிசு செய்த சிவாஜி
https://youtu.be/iCB2o0u9Ovs?si=EgmBJRCRMQcKOJB7
எம் ஜீ ஆருடன் கவுண்டமணி நடித்த படம்
https://youtu.be/WMbvoxfB10U?si=Cq7nKjVPDgIpC6Oj
தேனி மாவட்ட செய்தி தளத்தில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BO
புதிய பேருந்து நிலையத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு பின்பு தேனி அல்லிநகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் அரசு பதிவு பெற்ற TUCC ஆட்டோ சங்கம் செயல்பட்டு வருகிறது
மக்கள் நலனின் கருதி ஆட்டோ சங்கம் தற்பொழுது செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஆட்டோ நிறுத்தம் அருகே தடுப்பு சுவர் அமைப்பதனால் போக்குவரத்து இடைஞ்சல்கள் மற்றும் பல்வேறு விபத்தும் அதிகமாக ஏற்பட உள்ளது .இதனை கருத்தில் கொண்டு ஆட்டோ சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியினை போக்குவரத்து இடைஞ்சல்கள் இல்லாமல் அமைக்க வேண்டும் என்றும் இந்த தடுப்பு சுவர் அமைப்பதினால் அதிக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஆட்டோ சங்கத்தின் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் தடுப்பு சுவர் அமைக்க தேனி மாவட்ட ஆட்சியர் நேரடியாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி டி யு சி சி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது
எஸ் ஆர் தமிழன் ஆட்டோ நிலையத்தில் ஆட்டோ சங்கத் தலைவர் முத்துசாமி தலைமையில் மனு அளித்ததில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி முன்னிலையில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்



