போடியில் புதிதாக திறக்கப்பட உள்ள தனியார் மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு.
போடியில் புதிதாக திறக்கப்பட உள்ள தனியார் மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு.பொதுமக்கள்,தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சிலமலை செல்லக்கூடிய ராணி மங்கம்மாள் சாலையில் சிசம் பப்ளிக் பள்ளி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் அரசு பொறியியல் கல்லூரி விடுதியும் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஏராளமான குடும்பங்கள் உள்ள நிலையில்,கரட்டுப்பட்டி பிரிவு அருகே டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது.போடி அரசு பொறியியல் கல்லூரியில் இருந்து சில மீட்டர் தூரத்தில் அமைந்திருந்த இந்த அரசு மதுபான கடைக்கு வரும் குடிமகன்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகள்,உள்ளிட்டோருக்கு ஏராளமான தொந்தரவு அளித்தனர். உச்சகட்டமாக மது பாட்டிலால் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ,மாணவிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி அந்த டாஸ்மாக் மதுபானக் கடையை நிரந்தரமாக மூடச் செய்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய தனியார் சொகுசு மதுபானக் கூடம் திறப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவ,மாணவிகள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தனியார் மதுபானக் கூடம் அமைந்தால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும்,ஏற்கனவே தாங்கள் இப்பகுதியில் இருந்த அரசு மதுபான கடையை அகற்றுவதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி அப்புறப்படுத்தியது அனைத்தும் வீணாகிவிடும் என இப்பகுதி பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தனியார் மதுபானக் கூடத்தை திறக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
டிஸ்கோ சாந்தியின் Top 10 தகவல்
https://youtu.be/xONEQZNjI9c?si=l0e-iYkyFrnxY1cl
ஒரே குடும்பத்தில் சினிமாவில் நுழைந்து வெற்றி தோல்விகளை சந்தித்த இரத்த உறவுகள்
https://youtu.be/bSz3Q7cv2ds?si=fLredw-Xe4l8wKBw
வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணையில் இவ்வளவு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளதா?
https://youtu.be/HxNnpEZmZuY?si=BNkymEyth6bZ8tbo
தேனி மாவட்ட தகவல்களுக்கு
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4
இந்த நிலையில் புதிதாக தனியார் மதுபானக் கூடம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராணிமங்கம்மாள் சாலை மற்றும் கரட்டுபட்டி,சாலை தோட்டம் வாக்கர்ஸ் கிளப்,சூல் இயற்கை அமைப்பு மற்றும் ரெங்கநாதபுரம் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.மேலும் புதிதாக தனியார் மதுபான கூட்டத்தை திறக்க முயற்சித்தால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவோம் என்றும் எச்சரித்தனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.



