தேனியில் அகமலை ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அகமலை ஊராட்சிக்குட்பட்ட கிராம விவசாயிகள் சார்பில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் போடிநாயக்கனூர் தாலுகாவில் உள்ள அகமலை ஊராட்சியில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளது என்றும் அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ள நிலையில் 400 விவசாயிகளுக்கு வனத்துறை மூலம் 15 நாட்களில் விவசாய நிலத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்,
மேலும் அந்தப் பகுதியில் 5 தலைமுறைக்கும் மேல் விவசாயம் செய்து வரும் நிலையில் தற்பொழுது வனத்துறை சார்பில் 15 நாட்களில் விவசாய நிலத்தில் இருந்து வெளியேற நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் , தங்கள் பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு விவசாயத்தைத் தவிர வேறு தொழில் தெரியாது என்றும் ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தும்,
இவ்வாண்டும் வனத்துறை சார்பில் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நெருக்கடி காட்டுகிறது என்றும், மேலும் விவசாயம் செய்யும் நிலங்களை நிரந்தரமாக விவசாயம் செய்ய தடை இல்லாமல் செய்யும் படியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்தேனி மாவட்ட விவசாய சங்க தலைவர் பாண்டியன் தலைமையில்,அகமலை அண்ணாநகர் ஊரடி ,ஊத்துக்காடு, கரும்பாறை,சொக்கன் அலை, பெரிய மூங்கில் ,சின்ன மூங்கில் ,பட்டூர், படப்பம் பாறை ,சுப்பிரமணியபுரம்,பேச்சியம்மன் சோலை, வாழைமரத்தொழு, எருமை தொழு, மருதாணியனூர் ,சூழ்து காடு, அலங்காரம், கான மஞ்சி , டார்ச்சை ,முத்து கோம்பை ,உலக்குரட்டி, . கொத்தமல்லி காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்



