தேனியில் தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் 59-வது மாவட்ட அளவிலானபோட்டி நடைபெற்றது
தேனியில் தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் 59-வது மாவட்ட அளவிலான பொதுப்பிரிவு (Open to all ) போட்டி நடை பெற்றது, இந்த போட்டியானது ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது ஒலிம்பியாட் செஸ் போட்டியில் இந்திய அணி வீரர்கள் Open மற்றும் மகளிர் பிரிவுகளில் தங்கம் வெற்று சாதனை படைத்ததை பாராட்டி கொண்டாடும் விதமாக நடை பெற்றது, விழாவினை வனசரகர் (ஓய்வு) S. அமனுல்லா தொடங்கி வைத்தார், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அகாடமி செயலாளர் R.மாடசாமி பரிசுகள் வழங்கினார், முன்னதாக அகாடமி தலைவரும், தமிழ்நாடு மாநில சதுரங்க நடுவருமானா S. சையது மைதீன் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகாடமி இயக்குனர் S. அஜ்மல்கான் செய்திருந்தார்,
வெற்றி பெற்றோர் விபரம்,
1,Sபரணி, 2, Sநாகபிரனேஷ் 3, S.ராம்சபரிஷ் 4,J.தியாஸ்ரீ 5,J சன்ஜெய்குமார் 6, N.சாய்சரவணா 7,A லோகேஷ்கிருஷ்ணா, 8, D. ஜஸ்வன்ந், 9, A . திருகார்த்திக் 10,M.அகிலேஷ், ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
இளம் சதுரங்க வீரர்களுக்கான பரிசு,
S. சிந்து ஜஸ்வின், R.இஷான்,S. சர்வேஷ்வர், / S.மதனா, R.சிவன் யா, ஆகியோருக்கும்,
சிறப்புபரிசு போடி சேனைதலைவர் நர்சரி பள்ளிமாணவர் V.சரவணகார்த்திக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மகளிர்கான சிறப்பு பரிசுகள்
S.ஜெய்ஹர்ஸ்னி, V. ஸ்ரீ கீர்த்திகாவுகா, R.சாத்வீகாவுக்கு வழங்கப்பட்டது, போட்டியில் தேனி அரசு மருத்துவ கல்லூரி, நாடார் சரஸ்வதி கலை அறிவில் மற்றும் பொறியியல் கல்லூரிகள் , கம்மவர் கல்லூரி உட்பட ஏராளமான கல்லூரி மாணவர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டு விளையாடினர், வெற்றி பெற்ற மாணவர்கள் அக்டோபர் 2-ம் தேதி திருச்சியில் நடைபெறஉள்ள மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,





