சாக்கடை நீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் ஏ வாடிப்பட்டி அருகே எ புதூர் என்னும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கினார்கள் இந்த மனுவில் தங்கள் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும்
தற்பொழுது வரை எங்கள் கிராமத்திற்கு எந்த வித அடிப்படை வசதிகள் இல்லை , சாக்கடை கால்வாய் வசதி இல்லை என்றும் மேலும் தங்கள் பகுதிகளில் அதிகமாக சாக்கடை தண்ணீர் தேங்கி இருப்பதினால் குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வந்து கொண்டு உள்ளது என்றும் ,மேலும் இதுபோன்ற நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்து சாக்கடை தண்ணீரை தூய்மைப்படுத்த வேண்டும் என்று கூறி மனு அளித்தனர்


