தேனி சங்கர் மருத்துவமனையில் 7 ஆம் ஆண்டு துவக்க விழா
தேனி அல்லிநகரத்தில் சங்கர் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் இருதயம், சர்க்கரை பொது மருத்துவம் என அனைத்தும் பார்க்கப்படும் நிலையில் ,மருத்துவ பரிசோதனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் ,இந்த மருத்துவமனையில் உள்ளது.
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் ஏழாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. சங்கர் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் சங்கர் குமாரன் தலைமையில் ஏழாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு பணியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.மேலும் ஏழாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.




