Type Here to Get Search Results !

தேனி அருகே தப்புக்குண்டு லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு தம்புரன் மாடுகளுக்கு சேசை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி அருகே தப்புக்குண்டு லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு தம்புரன் மாடுகளுக்கு சேசை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி அருகே தப்புக்குண்டுவில் லட்சுமி நரசிங்கப்பெருமாள், கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பொங்கல் விழா நடைபெற்றது.இந்தநிலையில் லட்சுமி நரசிங்கப்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாடு சேஷவிடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக தப்புக்குண்டு, தாடிச்சேரி, காட்டுநாயக்கன்பட்டி, மல்லையகவுண்டன்பட்டி, சவளப்பட்டி ஆகிய 5 கிராமங்களின் சார்பில் தலா ஒரு காளை அழைத்து வரப்பட்டது. அந்த காளைகள் கோவில் எல்லையில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

அவற்றை பின்தொடர்ந்து மக்கள் ஓடினர். காளையை பிடித்துக்கொண்டு முதலில் கோவில் எல்லைக்கு வரும் நபருக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி காளையை முதலில் பிடித்து வந்தவருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

பின்னர், இந்த திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கரும்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம், பல்லையம் பிரித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

பின்னர், இந்த திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கரும்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம், பல்லையம் பிரித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store