தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பாக குப்பை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
தேனியில் உள்ள தேனி - அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பாக தேனி நகர காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி நகர காங்கிரஸ் கட்சி தலைவர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பகுதிகளில் தண்ணிச்சையாக பேரம் பேசி வசூல் செய்தும் , மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்துதரமால் இருந்து வருகிறது என்றும் , நகராட்சி பகுதியில் குப்பைகளை அகற்றாமால்,
அடிப்படை வசதிகள் செய்து தரமால் நகராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது என்றும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் நகராட்சி அலுவலகம் முன்பாக குப்பைகளை கொட்டியும் கோஷங்களை எழுப்பி குப்பைகளை அகற்றாமல் இருக்கும்தேனி தலைநகரம் நகராட்சியை கண்டித்தும்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் தனித்தனியாக குப்பைகளை அகற்றக் கோரியும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் மனு அளித்தனர்



