Type Here to Get Search Results !

திண்டுக்கல் குமுளி அகல ரயில் பாதை திட்டத்தை விரைவில் செயல்படுத்தக் கோரி தேனி ஆட்சியரிடம் மனு

 திண்டுக்கல் குமுளி அகல ரயில் பாதை திட்டத்தை விரைவில் செயல்படுத்தக் கோரி தேனி  ஆட்சியரிடம் மனு



தேனி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்ட குழு சார்பாக மனு அளிக்கப்பட்டது. போராட்டக் குழுவின் தலைவர் சங்கர நாராயணன் தலைமையில் அளிக்கப்பட்ட இந்த மனுவில் தேனி மாவட்டம் மக்களின் மிக நீண்ட கால கோரிக்கையான திண்டுக்கல் லோயர் கேம் ரயில் பாதை திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றும்,


இதனால் திண்டுக்கல் -குமளி அகல ரயில் பாதை திட்ட போராட்ட குழு சார்பாக 2010முதல் பல்வேறு போராட்டங்களை எடுத்து நடத்தி வருகிறது என்றும் ,மத்திய அரசு திண்டுக்கல் லோயர் கேம்  ரயில் பாதை திட்டத்தை திண்டுக்கல் சபரிமலை என விரிவாக்கி உள்ளது என்றும், லோயர் கேம் சபரிமலை செல்லும் வழியில் பெரியார் அணை, வனவிலங்கு சரணாலயம்  மலைப் பகுதிகள் உள்ளன என்றும், எனவே இந்த திட்டத்தினை செயல்படுத்துவது  தாமதமாக உள்ளது என்றும் இதனால் இந்த திட்டத்தினை திண்டுக்கல் - லோயர் கேம் என்ற திட்டமும் லோயர் கேம் -சபரிமலை என இரண்டு திட்டங்களாக நிறைவேற்றினால் திட்டம் விரைவில் நிறைவேறும் என்றும், முதல் கட்டமாக திண்டுக்கல் லோயர் கேம் திட்டத்தை உடனடியாக துவக்க வேண்டும் என்றும் இந்த திட்டத்தினால் தேனி திண்டுக்கல் இடுக்கி என மூன்று மாவட்டங்கள் பயன்பெறும் என்றும்,திண்டுக்கல் சபரிமலை ரயில் திட்டத்தை இரண்டாகப் பிரித்து முதல் கட்டமாக 120 கிலோமீட்டர் திண்டுக்கல் லோயர் கேம் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசுக்கும், ரயில்வே துறைக்கும் பரிந்துரை செய்து ,

இந்தத் திட்டத்தினை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ,இந்த திட்டமானது தேனி மாவட்ட மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கை என்றும் இதனால் இந்த திட்டத்தினை விரைவில் தொடங்க வேண்டும் என்று கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் - குமுளி அகல  ரயில் பாதை திட்ட போராட்ட குழு சார்பாக மனு அளிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் மனோகரன் ,காந்தி ராஜன், ரவிச்சந்திரன் ,அந்தோணி பிரான்சிஸ் ,மெல்வின்,  ரவிச்சந்திரன், வனராஜ் ,மகாராஜன், பார்த்திபன் பாஸ்கரன் மற்றும் திண்டுக்கல் குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்ட குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store