போடி அருகே தீரன் சின்னமலை கவுண்டர் பிறந்த நாள் விழா விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது
தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்காபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை கவுண்டரின்269 ஆவது பிறந்தநாள் விழா அனைத்து கவுண்டர்கள் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில் விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது.அனைத்து கவுண்டர்கள் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் மு வீரப்ப கவுண்டர் தலைமையிலும்
மாநில இளைஞரணி தலைவர் மௌனகுரு கவுண்டர், திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி தலைவர் சிவசக்தி கவுண்டர் ,தேனி மாவட்ட செயலாளர் பிச்சைமணி கவுண்டர்,
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மகேந்திரன் கவுண்டர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையிலும் கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாள் விழாவில் நிறுவனத் தலைவர் வீரப்ப கவுண்டர் பங்கேற்று தீரன் சின்னமலை கவுண்டர் சுதந்திரத்திற்காக எவ்வாறு பாடுபட்டார் என்றும் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவிகள் செய்தார் என்றும் அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றியும் சிறப்பு உரையாற்றினார்
.முதலில் தீரன் சின்னமலை கவுண்டரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது .தொடர்ந்து ராசிங்காபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
முன்னதாக தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்த அனைத்து கவுண்டர்கள் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் வீரப்ப கவுண்டருக்கு தேனி மாவட்ட எல்லையிலும் ,சங்கரமூர்த்திபட்டி, ராசிங்காபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
இந்த நிகழ்வின் போது தேனி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், ராசிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்