தேனியில் திமுக சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர் பந்தல் தொடக்க விழா
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நேரு சிலை பகுதியில் திமுகவின் தேனி நகர் சார்பாக தற்பொழுது ஏற்பட்டுள்ள வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர்மோர் பழங்கள் , இளநீர் வழங்கும் விழா நடைபெற்றது தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்று பொதுமக்களுக்கு நீர்மோர் பழங்கள் இளநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தேனி நகர திமுக செயலாளர் நாராயணபாண்டியன் தேனி நகராட்சி துணை சேர்மன் வழக்கறிஞர் செல்வம், திமுக கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நீர்மேர் பந்தலில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று நீர் மோர் அருந்தி வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொண்டனர் .
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தேனி நகர செயலாளர் நாரயணபாண்டியன் செய்திருந்தார்



