தேனியில் தேனி மாவட்ட அனைத்து இயந்திர தொழிலாளர் நல சங்கம் சார்பில் 15 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தேனி மாவட்ட அனைத்து இயந்திர தொழிலாளர் நல சங்கம் சார்பில் 15 ஆம் ஆண்டு தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது.இந்த மே 1 தொழிலாளர் தின விழாவை முன்னிட்டு ஏழை எளிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறப்பிக்கப்பட்டது தொடர்ந்து சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பிரியாணி வழங்கி சிறப்பிக்கப்பட்டது .
தேனி மாவட்ட தலைவர் பெருமாள் ,மாவட்ட செயலாளர் கவியரசு ,பொருளாளர் மகேஷ் ,சட்ட ஆலோசகர் ஹசன் முகமது ,துணைத்தலைவர் செல்வகுமார் ,துணை செயலாளர் மணிமுத்து, கௌரவ ஆலோசகர்கள் கருப்பையா ,ராஜேஷ் கண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்று மே 1 தொழிலாளர் தினத்தின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.தொடர்ந்து சங்கத்தின் பெயர் பலகை திறந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்







