தேனியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய ஆட்டோ சங்க நிர்வாகிகள்
தேனியில் தேனி அல்லிநகரம் - நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சி ஆட்டோ சங்கம் சார்பாக மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஆட்டோ சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது .தொடர்ந்து அல்லி நகரம் பொம்மையா கவுண்டன்பட்டி பழனிசெட்டிபட்டி தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
. மேலும் இந்த நிகழ்ச்சியில்ஆட்டோ சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் ,செயலாளர் வெங்கடேசன்,பொருளாளர் அப்துல்லா அஜஸ் ,,இணை தலைவர் குருசாமி துணை தலைவர் ஜெயக்குமார்,ஆட்டோ சங்க ஆலோசகர் சங்கர் மற்றும் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்




