ஆண்டிபட்டி அருகே நெகிழி குறித்து விழிப்புணர்வு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் திருமலாபுரம் ஊராட்சியில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்து உள்ளது . இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு மாவட்ட திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை அபிதா ஹனிப், ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ,
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பேயத்தேவன் ஆண்டிபட்டி வட்டார துணை ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் ,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி திருமலாபுரம் ஊராட்சி செயலர் குமரேசன் ,துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்று பொது மக்கள் நெகிழி பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் , மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பற்றியும் கோசங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.
மேலும் ஒரே ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியை பயன்படுத்தக் கூடாது என்றும், நெகிழியை பிரித்து பெற வேண்டும் எனவும், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் எடுத்துரைத்தார் .அதேபோல் குன்னூர் ஊராட்சியில் நெகிழி பயன்பாடு பற்றியும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் ,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர் .
இதே போல் குன்னூர் ஊராட்சியிலும் நெகிழி பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொது மக்களிடேயே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந் நிகழ்வில் குன்னூர் ஊராட்சி செயலர் விஜயகுமரேசன், தூய்மை பணியாளர்கள் , மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்




