Type Here to Get Search Results !

ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி வளாகத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனரின் உடல் நிர்வாணமான நிலையில் மீட்பு

 ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி வளாகத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனரின் உடல் நிர்வாணமான நிலையில் மீட்பு



ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி வளாகத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனரின் உடல் நிர்வாணமான நிலையில் மீட்பு  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ  இடத்தில் விசாரணை .

Theni 


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சுமார் 40வயது மதிக்கதக்க ஆட்டோ ஓட்டுனர் தங்கமலை.இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 


இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் நிலையில் காலை தெப்பம்பட்டி   அரசு மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் ஆட்டோ டிரைவர் உடலில் பலத்த காயங்களுடன் உடல் நிர்வாணமான நிலையில் கிடந்தது.



தெப்பம்பட்டி  பாலகோம்பை செல்லும்  சாலையில் உள்ள அரசு  மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்த நிலையில் உடல்  கிடந்தது.



 இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிப்பட்டி  துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் , போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,மோப்பநாய் பைரவா மற்றும் தடயவியல் நிபுணர் குழுவினருடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேகபிரியா நேரில் வந்து ஆட்டோ ஓட்டுனரின் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். 


இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுனரின் உடல் அரசு பள்ளி வளாகத்தில் கிடப்பதால் தற்போது அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store